மேலப்பட்டமுடையார்புரம் ஆலயத்திற்கு 1908 ம் இண்டு ஜூன் மாதம் 2ம் தேதி அன்று ஜாண் சண்முக நாடார் அவர்களிடத்திலிருந்து அன்றைய உபதேசியார் G. ஆசீர்வாத உபாத்தியாயர் (ஞானமுத்து நாடார் குமாரர்) அவர்கள் பெயருக்கு ஆலயத்திற்கென ரூபாய் 40க்கு சர்வே எண் 1298 -ல் கிழ மேல் தச்சு முளம் 12 தென் மடல் தச்சு முளம் 25 அளவு நிலம் வாங்கப்பட்டு ஓலை வேயப்பட்ட ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அன்று 1. முத்தையா நாடார் 2. சீமோன் நாடார் 3. மு. சாமுவேல் நாடார் ஆகிய குடும்பங்கள் கிறிஸ்துவை வழிபட்டு வந்தனர்.
அதன் பின்னர் 1927ம் ஆண்டு 30 குடும்பங்களாக மாறியது. திரு தவசிமுத்து அவர்கள் உபாத்தியராக பணியாற்றி திருச்சபை பெருகி வந்தது. எனவே 1929 -ல் திரு. S. மனுவேல் உபாத்தியாயர் பணி செய்த காலத்தில் ஆலயத்தை 17.5 முளம் நீளம், 6 முளம் அகலத்தில் ஓட்டுக் கட்டிடமாக மாற்றி அருள்திரு. YD தேவதாசன் ஐயரவர்கள் குருவானவராக பணிசெய்த காலத்தில் பேராயர் மகாகனம் பிரடெரிக் ஜேம்ஸ் வெஸ்டர்ன் அவர்களால் 29.7. 1929 அன்று ஆலயம் தூய இம்மானுவேல் ஆலயம் ஏன்று பெயரிடப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று ஆலயத்திற்கு இருந்த நிலம் 11 சென்ட் ( 26 முளம் நீளம், 24 முளம் அகலம்). தினமும் காலை, மாலை ஆராதனையும் ஞாயிறு காலை ஆராதனையும், மதியம் லித்தானியா ஆராதனையும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
1931ம் ஆண்டு ஆலயத்தின் முன்புற மண்டபம் கட்டி சிறிய கோபுரம் கட்டி கோபுரத்தில் மணி தொங்கவிடப்பட்டுள்ளது. 1965ம் ஆண்டு சீமோன் நாடார் பேரன் சீமோன் தங்கசாமி அவர்கள் ஆலய பொருளாளராய் இருந்தபோது 70 குடும்பங்களாய் மாறியதால் ஆலயத்திற்கு பின்புறம் ஆலயம் விஸ்தரித்து கட்டப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு 128 குடும்பங்களாய் மாறியபோது சீமோன் நாடார் பேரன் 1. திரு. உ. சீமோன் செல்லப்பா 2. சீமோன் நாடார் பேரன் திரு. ஏ. ஜாண் விக்டர் 3. திரு. பாக்கியநாதன் அவர்களின் தீவிர முயற்சியால் புதிய இலயத்திற்கு 14.7.2001 ஆன்று பேராயர் மகாகனம் ந ஜெயபால் டேவிட் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு சபை ஊழியர் ந ராஜகொழந்து சேகர தலைவர் அருள்திரு ஈ. பிரடெரிக் சாமுவேல் ஐயரவர்கள் காலத்தில் ஆலயம் விரைவாக கட்டப்பட்டு கான்கிரீட் கட்டிடமாக உருவெடுத்து கோபுரமும் கட்டப்பட்டு 20.12.2001 ஆன்று பேராயர் மகாகனம் S. ஜெயபால் டேவிட் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.